Saturday 9 December 2006

துரைவி எனும் இலக்கிய நேசகர்!




(1931-1998)



டிசம்பர் மாதம்!
ஒரு சில வருடங்களாக இந்த டிசம்பர் மாதம் வந்தாலே
தவிர்க்க முடியாமல் வரும் குளிரை போல,
எனக்கு நினைவுக்கு வருவது
துரைவி என
ஈழத்து தமிழ் கலை இலக்கிய உலகத்தால்
அழைக்கப்பட்ட
அமரர் துரை விஸ்வநாதன் ஐயாவின்
நினைவு தான் மனசை மூட்டும்.

அவர் ஈழத்து தமிழ் கலை இலக்கிய உலகுக்கு
ஆற்றி சென்ற பங்கு என்ற வகையில்
ஒரு வரலாறாக பதியப்பட்டுள்ளது.

அவரது உழைப்பால் உருவான துரைவி பதிப்பத்தின் மூலம் அவர் வெளியிட்ட நூற்களை பார்க்கும் பொழுது, குறிப்பாகஅவர் வாழ்ந்த காலத்தில் வெளியிட்ட புத்தகங்களை பார்க்கும் பொழுதெலாம் ஒவ்வொரு புத்தகத்தையும் ரசித்து அதனுள் ஆழ்ந்து அவை தம்மை அவர் வெளியிட்ட் பாங்குநினைவுக்கு வருகிறது.

அந்த நினவு மீட்டலில் அவர் வெளியிட்ட புத்தகங்களின் விபரம் கீழே தருகிறேன்.


துரைவி வெளியீடுகள்


1
மலையகச் சிறுகதைகள்
33 மலையக எழுத்தாளர்களின் கதைகள்



2
உழைக்கப் பிறந்தவர்கள்
55 மலையக எழுத்தாளர்களின் கதைகள்



3
பாலாயி
தெளிவத்தை ஜோசப்பின் மூன்று குறுநாவல்கள்



4
மலையகம் வளர்த்த தமிழ்
சாரல் நாடனின் கட்டுரை



5
சக்தி பாலையாவின் கவிதைகள்
சக்தி பாலையாவின் கவிதைகள்



6
ஓரு வித்தியாசமான விளம்பரம்
ரூபராணி ஜோசப்பின் சின்னஞ் சிறுகதைகள்



7
மலையக மாணிக்கங்கள்
மலையக முன்னோடிகள் பற்றிய அந்தனி ஜீவாவின் ஆய்வு நூல்



8
தோட்டத்து கதாநாயகர்கள்
நடைச்சித்திரம் கே.கோவிந்தராஜ்



9
பரிசு பெற்ற சிறுகதைகள்


1998துரைவி- தினகரன் இணைந்து நடத்திய
சிறுகதைப் போட்டியில் பரிசுப் பெற்ற கதைகள்



10
மலையகச் சிறுகதை வரலாறு
ஸ்ரீ லங்கா சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற
தெளிவத்தை ஜோசப்பின் ஆய்வு நூல்



11
துரைவி நினைவலைகள்

அமரர் துரை விஸ்வநாதன் அவர்களைப் பற்றிய கட்டுரைகள்



12
வெள்ளை மரம்
ஸ்ரீ லங்கா சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற
அல்.அஸுமத்தின் சிறுகதைத் தொகுதி



13
சி.வி.யின் தேயிலை தேசம்

ஸ்ரீ லங்கா சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற
சி.வி. வேலுப்பிள்ளை ஆங்கிலத்தில் எழுதிய
நூலின் தமிழ் மொழியாக்கம்
மொழியாக்கம்;மு.சிவலிங்கம்



14
உனக்கு எதிரான வன்முறை
மேமன்கவியின் கவிதைத் தொகுதி