Monday, 19 February 2007

துரைவி நினைவுப் பேருரை.

துரைவியின் 76வத பிறந்த தின


நினவுப் பேருரை


இம்மாதம் 28ந்திகதி

ஈழத்து தமிழ்ப் பதிப்புத் துறையில் பணியாற்றிய துரை விஸ்வநாதன் (துரைவி)அவர்களின் 76 வது பிறந்த தினம் ஆகும். அதனையொட்டி அன்று(28.02.2007) மாலை 6.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கம் வினோதன் மண்டபத்தில் அடியேனின் தலைமையில் நினைவுப் பேருரை நிகழ்வு நடைபெறவுள்ளது. "ஈழத்து ஆங்கில இலக்கியம்" எனும் தலைப்பில் திரு கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் அப்பேருரையை நிகழ்த்துவார்.

Sunday, 10 December 2006

துரைவி நினைவு மாதம்

அன்னாரின் அன்றைய (1998) நினைவாஞ்சலி கூட்டத்தில் வாசித்த கவிதையிலிருந்தது சில வரிகள்


ஐயா!
நீங்கள் மரணித்தனால்
விடுதலையாகிப் போனீர்கள்!
நாங்களோ-
இன்றும் இன்னும்
விடுதலைக்காய்
மரணித்துக் கொண்டிருக்கிறோம் ஐயா!!!

Saturday, 9 December 2006

துரைவி எனும் இலக்கிய நேசகர்!
(1931-1998)டிசம்பர் மாதம்!
ஒரு சில வருடங்களாக இந்த டிசம்பர் மாதம் வந்தாலே
தவிர்க்க முடியாமல் வரும் குளிரை போல,
எனக்கு நினைவுக்கு வருவது
துரைவி என
ஈழத்து தமிழ் கலை இலக்கிய உலகத்தால்
அழைக்கப்பட்ட
அமரர் துரை விஸ்வநாதன் ஐயாவின்
நினைவு தான் மனசை மூட்டும்.

அவர் ஈழத்து தமிழ் கலை இலக்கிய உலகுக்கு
ஆற்றி சென்ற பங்கு என்ற வகையில்
ஒரு வரலாறாக பதியப்பட்டுள்ளது.

அவரது உழைப்பால் உருவான துரைவி பதிப்பத்தின் மூலம் அவர் வெளியிட்ட நூற்களை பார்க்கும் பொழுது, குறிப்பாகஅவர் வாழ்ந்த காலத்தில் வெளியிட்ட புத்தகங்களை பார்க்கும் பொழுதெலாம் ஒவ்வொரு புத்தகத்தையும் ரசித்து அதனுள் ஆழ்ந்து அவை தம்மை அவர் வெளியிட்ட் பாங்குநினைவுக்கு வருகிறது.

அந்த நினவு மீட்டலில் அவர் வெளியிட்ட புத்தகங்களின் விபரம் கீழே தருகிறேன்.


துரைவி வெளியீடுகள்


1
மலையகச் சிறுகதைகள்
33 மலையக எழுத்தாளர்களின் கதைகள்2
உழைக்கப் பிறந்தவர்கள்
55 மலையக எழுத்தாளர்களின் கதைகள்3
பாலாயி
தெளிவத்தை ஜோசப்பின் மூன்று குறுநாவல்கள்4
மலையகம் வளர்த்த தமிழ்
சாரல் நாடனின் கட்டுரை5
சக்தி பாலையாவின் கவிதைகள்
சக்தி பாலையாவின் கவிதைகள்6
ஓரு வித்தியாசமான விளம்பரம்
ரூபராணி ஜோசப்பின் சின்னஞ் சிறுகதைகள்7
மலையக மாணிக்கங்கள்
மலையக முன்னோடிகள் பற்றிய அந்தனி ஜீவாவின் ஆய்வு நூல்8
தோட்டத்து கதாநாயகர்கள்
நடைச்சித்திரம் கே.கோவிந்தராஜ்9
பரிசு பெற்ற சிறுகதைகள்


1998துரைவி- தினகரன் இணைந்து நடத்திய
சிறுகதைப் போட்டியில் பரிசுப் பெற்ற கதைகள்10
மலையகச் சிறுகதை வரலாறு
ஸ்ரீ லங்கா சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற
தெளிவத்தை ஜோசப்பின் ஆய்வு நூல்11
துரைவி நினைவலைகள்

அமரர் துரை விஸ்வநாதன் அவர்களைப் பற்றிய கட்டுரைகள்12
வெள்ளை மரம்
ஸ்ரீ லங்கா சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற
அல்.அஸுமத்தின் சிறுகதைத் தொகுதி13
சி.வி.யின் தேயிலை தேசம்

ஸ்ரீ லங்கா சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற
சி.வி. வேலுப்பிள்ளை ஆங்கிலத்தில் எழுதிய
நூலின் தமிழ் மொழியாக்கம்
மொழியாக்கம்;மு.சிவலிங்கம்14
உனக்கு எதிரான வன்முறை
மேமன்கவியின் கவிதைத் தொகுதி
Wednesday, 15 November 2006

முணுமுணுப்பு-1

தமிழ் வலைப் பதிவு உலகமும்
நானும்
கடந்த இரண்டு மாத காலமாக தமிழ் வலைப் பதிவு உலகில் உலாத்திக் கொண்டிருக்கிறேன்.
ஒரு பக்கம் ஆச்சரியத்தையும் மறுபக்கம் சந்தோஷத்தையும் ஏற்படுத்திய அனுபவம் அது.
இலங்கை தமிழ் பேசும் கலை இலக்கிய வாசக பார்வையாளகளிடையே பரவலாக அறியப்படாத,(மற்றும் தமிழ் பேசும் சமூகத்தைச் சார்ந்த இணைய உலாத்திகளுக்கு,
(அவர்களிலும் ஒரு சிலருக்கு online chat பக்கம்தான் அதிக கவனம்.அதுவும் கொலை செய்யப்பட்ட ஆங்கில மொழியின் சமாதி மீது உட்கார்ந்து கொண்டு(உ+ம் you யை U யாகவும்,toயை 2 ஆகவும் மாற்றி கொன்று)
இந்த வலைப் பதிவு உலகத்தை பற்றிய பரிச்சயம் குறைவாகதான் இருப்பதாகவே எனக்கு படுகிறது.
எனக்கு கூட அந்த உலகத்தை பற்றிய பரிச்சம் இருந்திருக்கவில்லை.
இந்த உலகை பற்றிய எனது பரிச்சயத்திற்கு நான் முதலில் ,
தமிழோடு பரிச்சயத்துடன் இருக்க ஓர் உகந்த keyboard யாக நான் கருதுகின்ற tamilnet99 யை
தந்த விற்பனர்களையும் யுனிக்கோட் தமிழ் உள்ளீடு முறைமையைக்கான கருவிகளை உருவாக்கிய சகல தமிழ் கணணி விற்பனர்களையும் நன்றியுடன் நினைவுக் கூர கடமைப்பட்டு இருக்கிறேன்.
இத்தகைய வளங்களுடன் இணைய வீதிகளில் நான் உலாவியப் பொழுதுதான்- என் கண்ணில் முதல் முதலாக கண்ணில் பட்ட வலைப் பதிவு சந்திரமதி கந்தசாமியின் ''வலைப்பூ''
இதில் ஆச்சரியப்படதக்க ஒர் அம்சமாக என்னவென்றால் என் கண்ணில் பட்ட முதல் தமிழ் வலைப் பதிவான சந்திரமதி கந்தசாமியின் ''வலைப்பூ''
தமிழ் வலைப் பதிவு உலகில் கவனிக்கதக்க, அதே வேளை பங்களிப்பு மட்டத்தில் அதிக அளவான பங்களிப்புக்கள் வழங்கிய(2003ஆம் ஆண்டு தொடக்கம் என நினைக்கிறேன்) அதே வேளை தமிழ் வலைப் பதிவு உலகில் சில பரீட்சாத்த முயற்சிகளுக்கும் (ஒரு வலைப் பதிவுக்கு வெவ்வேறு ஆசிரியர்களை கொண்டு உருவாக்குவது என்ற மாதிரியான முயற்சிகள்) முன்முகமாக இருந்த ஒரு வலைப் பதிவாகவும் அது இருந்ததோடு, நவீன தமிழ் கலை இலக்கிய முயற்சிகளைப் பற்றியும் (இலங்கை தமிழகம் உட்பட்ட) விரிவாக தெரிந்தவர்களில் ஒருவராகவும் வலைப்பூவின் பிரதான ஆசிரியர் சந்திரமதி கந்தசாமி இருந்தமையும்
(இதுவரை காலம் தமிழ் வலைப் பதிவுகளை ஆராய்ந்த அனுபவத்தை அடிப்படையாக கொண்டு இக்கருத்துக்களை முன் வைத்திருக்கிறேன். எனது இக்கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் நண்பர் மத்தியில் இருக்கலாம்)
நான் தமிழ் வலைப் பதிவு உலகில் நுழைய Best First impression யாக இருந்தது என்பதே உண்மை.
இப்படி தொடங்கி தொடர்ந்த என் வலைப் பக்கங்களுக்கான பயணத்திற்கு வலைப் பக்கத் திரட்டிகளான
தமிழ்ப்பதிவுகள்,தேன்கூடு,தமிழ்மணம்,நிலாமுற்றம் போன்றவை எனக்கு பெரும் உதவியாக இருக்க,அந்த உதவியில் தன் பங்கையாற்ற அதே சந்திரமதி கந்தசாமியின் http://tamilblogs.blogspot.com/ எனும் 800 மேலான வலைப் பதிவுகளின் தொடுகைகளுடான நீண்ட பட்டியல் ஒரு வலைப் பதிவு.
(இதிலும் மதி கந்தசாமியே முன்னோடியாக, அதாவது வலைப் பதிவுகளின் விலாசப் பட்டியலை தனி வலைப் பதிவு ஒன்றாக இடுவதில்)
இனியென்ன... என் வலைப் பதிவு பயணம் தொடர்கிறது.
அந்த பயணத்தின் பயன்-
இலங்கை தமிழ் பேசும் மற்றும் கலை இலக்கிய உலகினருக்கு வலைப் பதிவு உலகைப் பற்றிய ஒரு நீண்ட அறிமுக கட்டுரை ஒன்றை எழுத என்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறது.
அத்தோடு மேலும் வலைப் பதிவுகளை பரஸ்பர நிலையில் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் மேலும் வழிகள் என்ன? என்ற யோசிக்க வைத்தது. அப்படி யோசித்ததில் என் மட்டத்தில் நான் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிக் கொண்டேன்.
அந்த தீர்மானம் இதுதான்.
எனது வலைப் பதிவு ஏதேனும் ஒன்றை பார்த்து படித்து-
என் பதிவுகளை கடுமையாக விமர்சித்தோ(இது நான் எதிர்ப்பார்க்கும் ஒன்று)பாராட்டியோ(இது நான் நிராகரிக்கக் கூடாத ஒன்று)
வலைப் பதிவாளர் ஒருவர் எனக்கொரு பின்னாட்டல் அனுப்பினால் அவரது வலைப் பதிவை எனது எல்லா வலைப் பதிவுகளின் தொடுகை பட்டியலில் (links listயில்) சேர்த்துக் கொள்வதாகும்.
இத்தீர்மானத்திற்கான உள்நோக்கம் மேலும் வலைப் பதிவு பணியில் என்னை திருத்திக் கொள்ளவும், மேலும் மேலும் பல வலைப் பதிவுகளை நானும், இன்னும் பலரும் அறிந்துக் கொள்ளவும்தான் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
எப்படி இருக்கிறது? என் தீர்மானம்!
நான் சரியா? நீங்கள்தான் சொல்லவேண்டும்

Tuesday, 14 November 2006

முன்னுரையாக.......

ஏற்கனவே-
மல்லிகை இதழில்
நீண்ட காலமாய்
இதே தலைப்பில்
முணுமுணுத்ததை
வலைப் பதிவில்
தொ ட ர் கி றே ன்..........................